விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து வருடா வருடம் ஒளிபரப்பாகி வருகின்றது. இதுவரை இடம்பெற்ற 7 சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த சீசனில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார்.
இந்த சீசனில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து ஹவுஸ்மேட்ஸ்களை டீமாகவே கேம் விளையாட வைத்து வருகின்றார்கள். இதில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களுள் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா, தியா தியாகராஜன் ஆகிய ஐந்து பேர் எலிமினேட்டாகி வெளியே சென்று உள்ளார்கள்.
d_i_a
எனினும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர்களோடு மொத்தமாக 19 போட்டியாளர்கள் காணப்படுகின்றார்கள். இதில் சௌந்தர்யா ரசிகர்களை பெரிதும் கவர்ந்த போட்டியாளராக காணப்படுகின்றார். நேற்றைய தினம் வெளியான ப்ரோமோக்கள் அத்தனையும் சௌந்தர்யாவை மையமாகக் கொண்டே எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வாரம் டேஞ்சர் சோனில் சிக்கிய போட்டியாளர்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதில் சிக்கிய மூன்று பேருமே பெண் போட்டியாளர்களாக காணப்படுகின்றார்கள்.
அதன்படி டேஞ்சர் சோனில் சிக்கிய போட்டியாளர்களாக சாச்சனா, தர்ஷிகா மற்றும் வர்ஷினி ஆகியோர் காணப்படுகின்றார்கள். இதில் யார் வெளியே போவார்கள் என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.
Listen News!