தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் சூர்யா. இவர் நடிப்பில் இறுதியாக கங்குவா திரைப்படம் வெளியானது. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் தயாரிப்பில் சூர்யா நடித்த திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் அவருடன் திஷா பதாணி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தார்கள். மேலும் இவர்களுடன் ஜோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, கருணாஸ் உட்பட பலர் நடிப்பில் இந்த படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியானது.
d_i_a
வரலாற்று கதை அம்சம் கொண்ட கங்குவா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக சூர்யா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து உள்ளார். அதில் அவருடைய உழைப்பு பாராட்டப்பட்டது. ஆனாலும் கங்குவா படம் பற்றிய விமர்சனங்கள் படுமோசமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம் என சீரியல் நடிகர் ரவி விளாசி உள்ளமை தற்போது பேசு பொருளாக காணப்படுகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், தமிழ்நாட்டில தரமான கல்வி கிடைக்காது. என் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்கத்தான் நாங்க பாம்பே போனோம்னு சொல்லுறீங்க. உங்க புள்ளைங்க மட்டும் தரமான பள்ளிக்கூடத்தில் படிக்கணும் ஆனா இங்க இருக்கிற மாணவர்கள் எக்ஸ்ட்ரா ஒரு மொழியை கத்துக்கிட்டா உன் புருஷனுக்கு பொத்துக்கிட்டு வந்துரும். அதை விமர்சனம் பண்ணுவார்.. நாங்களும் பண்ணுவோம்.. நாங்களும் செய்வோம்.. தொடர்ந்து செய்வோம்.. சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம்.. உன்னால முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என சீரியல் நடிகர் ரவி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!