தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காதல் முறிவுக்கு வந்தது.
இதை தொடர்ந்து விஜய் வர்மாவுடன் பிரிவிற்கு பிறகு நான் ஒரு சிறந்த வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கின்றேன்.. அதான் எனது இலக்கு என தெரிவித்து இருந்தார்.
மேலும் தமன்னாவுக்கு மொத்தமாக 120 கோடி சொத்து இருக்கு என்றும், விஜய் வர்மாவுக்கு 20 கோடி சொத்து என்றும் பேசப்பட்டது. படங்களில் மட்டும் இல்லாமல் விளம்பரங்கள் நடிப்பதற்கும் 6 கோடி வரையில் சம்பளம் வாக்குகின்றார் தமன்னா.
இந்த நிலையில், நடிகை தமன்னா கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. அதில் அவர் பியூட்டி டிப்ஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், தனக்கு முகப்பரு வந்தால் காலையில் பல் துலக்காமல் அந்த எச்சிலை எடுத்து வைப்பதாக சொல்லியுள்ளார். தற்போது அவர் கொடுத்த பியூட்டி டிப்ஸ் வைரலாகி உள்ளதோடு, பல கேலி கிண்டலுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!