• Jan 19 2025

கேப்டனுக்கு என் உடல் உறுப்புகளை தருகிறேன்! குவைத்திலிருந்து கண்ணீருடன் பேசிய ரசிகர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், தொடர்ந்து ஓய்வில் இருக்கிறார். கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர், விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து நுரையீரல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிருந்தது. 


மேலும் இதற்காக மருத்துவமனையில் தங்கி 14 நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என மருத்துவமனை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியது.பல பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்தை நலம் விசாரித்து வருகின்றனர். அதனால் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது என்றும் தகவல் வெளியாகிருந்தது. 


இந்த நிலையில், விஜயகாந்திற்காக எனது உடலுறுப்புகளை தானமாக வழங்க நான் தயாராக உள்ளேன் என குவைத்தில் இருக்கும் ரசிகர் ஒருவர் கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், 
 
'நான் நியூஸ் பார்த்தேன். விஜயகாந்திற்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. என் தலைவனுக்கு ஏதாவது உறுப்புகள் தேவைப்பட்டால், அதை மாற்ற வேண்டும் என்றால் எனது கல்லீரல், நுரையீரல், என எந்த ஒரு உறுப்பு வேண்டுமானாலும் நான் தருகிறேன். நான் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவன். அவருக்கு ஏதாவது தேவைப்பட்டால் நான் இங்கிருந்து உடனடியாக வருகிறேன். எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் நான் வருகிறேன்” என உருக்கமாக பேசியுள்ளார்.



Advertisement

Advertisement