• Feb 22 2025

இளையராஜா மகள் யுவன் சங்கர் ராஜா சகோதரி இறப்பு... நடிகர் சிலம்பரசன் உணர்ச்சிபூர்வமான இரங்கல்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று இலங்கையில் காலமானார். இந்த விடயம்  திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்நிலையில் நடிகர் சிம்பு தனது டுவிட் பக்கத்தில் இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.


கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில் இலங்கையில் உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையிலே நேற்று உயிரிழந்துள்ளார். 


இந்நிலையில் நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் "அப்பாவித்தனத்திற்காகவும் அன்பிற்காகவும் மக்கள் இதயத்தில் என்றும் வாழும் உங்கள் குரல். நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள். சீக்கிரம் எம்மை பிரிந்து சென்று விட்டார். இளையராஜா சார் மற்றும் எனது சகோதரரின் குடும்பத்தினருக்கு வலிமை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்" என டுவிட் செய்து பதாரணியின் குரலில் ஒலித்த மாஷா அல்லா  பாடலையும் இணைத்துள்ளார்  

Advertisement

Advertisement