• Jan 19 2025

என் அக்காவை இனி பாக்க முடியாது - மனமுடைந்த பவதாரிணியின் தங்கை

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று இலங்கையில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம்  திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் உறவினர்கள் அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளனர்.


கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காலமானார். அதன்படி, பவதாரணிக்கு தற்போது 47 வயதான நிலையில், இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சமீபத்தில் இலங்கை சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தர். இந்நிலையில் நேற்று 5.30 மணியளவில் அவர் இலங்கையில் மரணமடைந்திருக்கிறார். இந்நிலையில் அவரின் உறவினரான விலாசினி இது தொடர்பாக மனம் திறந்துள்ளார்.


"இப்போ ஒரு மாதத்திற்க்கு முன்னர் தான் தெரியும் அவர் புற்றுநோயால் பாதிக்க பட்டு இருக்கிறார் என்று. ஹாஸ்ப்பிட்டல் சென்று  பார்த்த போதுதான் கேன்சர் 4 ஸ்டேஜ் என்று சொன்னாங்க அதுக்காகத்தான் இலங்கை கொண்டு போறாங்க என்று சொன்னாங்க அங்க இன்னும் சிகிச்சை ஆரம்பிக்க கூட இல்ல இப்படி இறந்துட்டாங்க. என்னால வர முடியாது நான் அமெரிக்கால இருக்கன், இப்பத்தான் கால் பண்ணிசொன்னாங்க" என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement