• Jan 19 2025

நீ ஆம்பளையாக இருந்தால் அவர் வீட்டு வாசலுக்கு போய் அவரை திட்டு- வடிவேலுவை கழுவி ஊற்றிய நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் தான் விஜயகாந்த். இவர் கடந்த சில நாட்களுககு முதல் இறப்புக்குள்ளானது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக தங்கள் சினிமா வாழ்க்கையில் எந்த அளவிற்கு விஜயகாந்த் அவர்கள் தங்களுக்கு உதவினார் என்று பல நடிகர், நடிகைகளும் தங்களுடைய கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஆனால் சினிமாவில் விஜயகாந்தால் வளர்த்து விடப்பட்ட நடிகர் தான் வடிவேலு. இவர்  நடிகனாக மாபெரும் வெற்றியை பெற்றிருந்தாலும், ஒரு சராசரி மனிதனாக அவர் தோல்வியை கண்டுள்ளதாகவே கூறுகின்றனர் மக்கள். இந்நிலையில் அவருக்கும் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் குறித்து பல தகவல்கள் இணையத்தில் உலவி வரும் இந்த நேரத்தில் நடிகர் பொன்னம்பலம் வெளியிட்ட சில தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 பிரபல திரைப்பட விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன்.அவர் வெளியிட்ட தகவலின்படி பொன்னம்பலம் ஒரு பேட்டியில் பேசிய பொழுது "சுந்தர் சி அவர்களுடைய நகரம் என்கின்ற படத்தில் அவரோடு நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது சுந்தர் சி எனக்கு கொடுத்த டயலாக் பேப்பரில் இல்லாத ஒரு வசனத்தை நான் பேசினேன்.

 அதை கேட்ட வடிவேலு உடனே கேப்டன் விஜயகாந்த் அவர்களை மேற்கோள்காட்டி அவரை கிண்டல் செய்ய தொடங்கினார். எனக்கு சட்டென்று கோபம் வந்தது, "வடிவேலு அவரைப் பற்றி தப்பா பேசாத, உனக்கு அவரை பிடிக்கவில்லை என்பதற்காக என்னை வைத்து அவரை திட்டாதே, நீ ஆம்பளையாக இருந்தால் அவர் வீட்டு வாசலுக்கு போய் அவரை திட்டு" என்று கூறினேன். 


எனக்கு வாழ்வளித்த கேப்டனை என் முன்னாலே திட்டினாள் என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும் என்று அந்த பேட்டியில் பொன்னம்பலம் அவர்கள் பேசியுள்ளதாக கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement

Advertisement