• Apr 15 2026

பிக் பாஸ் இல்லத்தில் வைக்கப்பட்ட பணப்பெட்டி... பணப்பெட்டியை எடுத்த போட்டியாளர் யார் தெரியுமா? வெளியானது BIGG BOSS 7 PROMO-1

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டீவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது முடிவுறும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான பிக் பாஸ் முதல் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கிறது. 


அனைவரும்  ஆவலுடன் எதிர் பார்த்த பணப்பெட்டி சுற்று தான் இன்றைய நாளுக்கான போட்டியாக அமைந்திருக்கிறது. ஆரம்ப பணத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வைக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்த தினேஷ் கூடுதலாக ஒரு பூச்சியம் வந்த பிறகு அந்த பண பெட்டியை எடுப்பதை பற்றி யோசிப்போம் என கூறுகிறார்.


உயர்ந்து கொண்டே இருக்கிறது பணப்பெட்டியில் தொகை, அப்போது விஷ்ணு தினேஷிடம் பார்ப்போம் யாரு பணப்பெட்டியை எடுக்கிறார்கள் என்று சொல்கிறார். அந்த பக்கம் விசித்ரா சீக்கிரம் யாராவது பணப்பெட்டியை எடுத்துட்டு போங்க என்று சொல்கிறார். அதனை கேட்ட தினேஷ் இந்த சீசன்ல பண பெட்டியை யாரும் எடுக்க மாட்டாங்க என்று சொல்கிறார்.


அந்த பண பெட்டியை யாரும் எடுப்பதாக தெரியவில்லை, யாரு எடுத்துட்டு போவார்கள் என்று ஒவ்வொருவரும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. இன்றைய நாள் எபிசோட் பார்த்து யார் பணப்பெட்டியை எடுக்கிறார் என்பதை பார்ப்போம். 

 

Advertisement

Advertisement