• Nov 15 2025

தலைவருக்காக சாகுற வரைக்கும் உழைப்பேன்..! 2026 இன்னும் பிரகாசமா இருக்கும்! தாடி பாலாஜி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்த உள்ள முதலாவது மாநில மாநாடு நாளைய தினம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைவரான விஜய் தலைமையில் நாளைய தினம் முதலாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் விக்கிரவாண்டி நோக்கி படையெடுத்துள்ளார்கள்.

மாநாட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள், ஒவ்வொரு பணியையும் சிறப்பாக பார்த்து பார்த்து செய்துள்ளார்கள். மாநாட்டிற்கு வரும் மக்களுக்காகவே மருத்துவ பணி, தொழில்நுட்ப வசதி, சாப்பாட்டு வசதிகள், கழிப்பிட வசதி என்பவற்றோடு வந்து செல்லும் வாகனங்களுக்காகவே பஞ்சர் ஒட்டும் வசதி கூட செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக காணப்படும் நடிகர் தாடி பாலாஜி விஜயின் மாநில மாநாட்டிற்கு முதல் நாளான இன்றைய தினமே விக்ரவாண்டி இடத்திற்கு சென்று அங்கிருந்து பேட்டி கொடுத்துள்ளார். தற்பொழுது அவர் கொடுத்த பேட்டி வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில்,  ஒரே வியப்பா இருக்குது.. விக்கிரவாண்டி சாலையை பார்த்தாலே பிரகாசமா இருக்கு. இது இப்ப ஜொலிக்குது 2026ல மொத்த நாடுமே பிரகாசமா இருக்கும். விஜய் இப்படி ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்து தான் யார் என்பதை நிரூபித்து விட்டார். இதுவரை இப்படி ஒரு ஏற்பாடுகளை நான் பார்த்ததே கிடையாது. சாகுற வரைக்கும் என் நண்பர் தலைவருக்காக நான் பாடுபடுவேன் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement