• Jan 19 2025

பொண்ணு ஓகே என்றால் கல்யாணம் பண்ணிப்பேன்- முதன் முதலாக காதல் குறித்து ஓபனாகப் பேசிய நடிகர் பாலா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான்  பாலா.வெட்டுக்கிளி என அழைக்கப்படும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்டர் கொடுத்து அசத்துவார். 

இந்நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பெரிய ரீச் பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும் .டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.


அந்த வகையில் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு சூப்பராக  பதில் கூறிஇருக்கின்றார்.  உங்களுக்கு காதல்  திருமணமா அப்பிடீன்னு கேட்டதுக்கு பாலா தன்னுடைய ஸ்ரைலில் தரமான பதிலை கூறியிருக்கின்றார்.

அவர் கூறியதாவது,முதல்ல காதல் வரனும் அதுக்கு  பிறகு திருமணம் நடக்கணும் அதுக்கு முதல்  இத பார்த்திட்டு பொண்ணு வரணும் அப்பிடீன்னு சொல்லியிருந்தாரு.உங்களுக்கு ஆன்மீக பக்தி இருக்கா என்று கேட்டதற்கு கடவுள் இல்லை என்றால் நான் இல்லை என்று கூறியிருக்கின்றார்.


அத்தோடு உங்களுக்கு கஸ்டம் வந்த என்ன செய்வீங்கன்னு கேட்டதற்கு பக்கத்தில இருந்த அமுதவாணன் உடனே லவ்வர் போட்டோ பார்ப்பாருனு நகைச்சுவையாக சொல்லியிருந்தார்.இந்த காணொளி தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement