• Jan 19 2025

ரசிகர்கள் என்னை மறந்து விடுவார்கள்... பதற்றத்தில் நடிகர் ஜீவா... கடைசியாக எடுத்திருக்கும் முடிவு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தயாரிப்பாளரின் மகன்  என்ற அந்தஸ்துடன்  சினிமாவில் நுழைந்தவர் தான் நடிகர் ஜீவா . தனது திறமையால் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் ஒரு அளவு நல்ல வரவேற்பையும் பெற்று வந்தது. குறிப்பாக காமெடி படங்கள் தான் பெரிய அளவில் ஜீவாவுக்கு கை கொடுத்தது.


ஆனால் சமீபகாலமாக ஜீவாவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை   இந்நிலையில் இப்போது மலையாள நடிகர் மம்முட்டி உடன் இணைந்து யாத்ரா 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.


மேலும் இப்படியே டபுள் ஜீரோ சப்ஜெக்ட்டில் நடித்தால் ரசிகர்கள் சீக்கிரம் தன்னை மறந்து விடுவார்கள் என்ற பயத்தில் ஜீவா முக்கிய முடிவு ஒன்று எடுத்திருக்கிறார். அதாவது ஒரு காலத்தில் சிவா மனசுல சக்தி போன்ற படங்கள் தான் ஜீவாவுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை கொடுத்தது.


ஆனால் இப்போது அது போன்ற படங்கள் செல்லுபடி ஆகுமா என்பது சந்தேகம் தான். ஆகையால் இப்போது   போலீஸ் கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு ஜீவா வந்துள்ளாராம். அதுபோன்ற கதைகளை தான் இயக்குனர்களிடம் இப்போது ஜீவா கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இது எந்த அளவுக்கு ஜீவாவுக்கு கைகொடுக்கும் என்பது சந்தேகம்தான். ஏனென்றால் இப்போது நிறைய போலீஸ் கதைத்திரைப்படங்கள் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருக்கிறது. 

விக்ரம் நடிப்பில் வெளியான சாமி 2 கூட மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வியை தான் தழுவியது. ஆனால் ஜீவா இப்போது எடுத்துள்ள முடிவால் அவருக்கு வெற்றி கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement