• Aug 23 2025

"நான்" படத்தில ஹீரோவா நடிச்சிருக்கணும்... ஆனா.. உண்மையை உடைத்த விஷ்ணு விஷால்

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறப்பு வாய்ந்த நடிப்புத் திறனைக் கொண்ட நடிகர் விஷ்ணு விஷால், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் தனது திரையுலகப் பயணத்தின் ஆரம்ப கட்ட அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார். குறிப்பாக, தனது முதல் பட வாய்ப்பு, அதில் ஏற்பட்ட விபரீதம் மற்றும் அதன் பின் அவர் மேற்கொண்ட முன்னேற்ற பாதை குறித்து வெளிப்படையாகக் கூறிய விஷ்ணு, தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளார்.


அதன்போது, “நான் முதன் முதலில் பண்ண வேண்டிய படம் விஜய் ஆண்டனி சார் நடித்த ‘நான்’ திரைப்படம். என்னை அந்த படத்திற்கு select பண்ணாங்க. அதுக்காக நான் என் உடலை சரி செய்தேன். ஆனா, எதுக்கு என்னை தூக்கிப் போட்டாங்கன்னு தெரியல. அன்னைக்கு நான் அங்க நேரா போய்ட்டு என்னட இருக்கிற படிப்பிற்கு ஏதாவது வேலைக்குப் போய் கூட புலைத்துக் கொள்வேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன்.” என்று தெரிவித்தார் விஷ்ணு. 


இந்த கருத்துகள் ஒரு நடிகரின் வேதனையை வெளிப்படுத்துகின்றது. இந்த நேர்காணலில் கூறிய விஷ்ணுவின் உண்மையான அனுபவங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும், “இப்படி ஒரு honest sharing-ஐ பார்த்ததே இல்ல,” என கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.


Advertisement

Advertisement