• Sep 12 2025

பாக்கியராஜ் வீட்டில் விசேஷம்; கேக் வெட்டி கொண்டாடிய சாந்தனு..! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ்,  நடிகை பூர்ணிமா ஆகியோரின் மகன் தான் சாந்தனு. இவர் சக்கரக்கட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  அதன் பின்பு  அம்மாவின் கைபேசி, ராவணக்கோட்டம், சித்து பிளஸ் டூ என பல படங்களில் நடித்தார்.  இறுதியாக இவருடைய நடிப்பில் ப்ளூ ஸ்டார் படம் வெளியானது. 

நடிகர் சாந்தனு  பிரபல தொகுப்பாளியான கீர்த்தியை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்தனர். அதற்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் இவர்களுக்கு 10 வருடம் ஆகியும் குழந்தை இல்லை.

சமீபத்தில்  இதனால் மனம் வருந்திய கீர்த்தியும் சாந்தனுவும் வெளிப்படையாகவே குழந்தை விஷயம் பற்றி யூடியூப் சேனலில் பேசி இருந்தனர். அதில் வேண்டுமென்றே குழந்தை எப்போது என்று கமெண்டில் கேட்கின்றீர்கள். 


குழந்தை பெற்றால் நீங்கள் பேபி சிஸ்டரா வாரீங்களா?  எங்களுடைய மனநிலையையும் சூழ்நிலையையும் புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் நேரம் உண்டு.  நாங்கள்தான் 10 வருடமாக தவிர்த்தோம்.  எங்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்கு நன்றி என காட்டமாக பேசி இருந்தனர். 

இந்த நிலையில்,  நடிகர் சாந்தனு - கீர்த்தி ஆகியோர்  கேக் கட் பண்ணி தமது திருமண நாளை கொண்டாடி உள்ளனர்.  தற்போது இவர்களுடைய புகைப்படம்   இணையத்தில் வைரலாகி வருவதோடு பலரும்  சாந்தனுக்கும் கீர்த்திக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். 


 

Advertisement

Advertisement