• Jan 30 2026

Shoot முடிச்சிட்டு வரும் போது அந்த மாதிரி ஒரு உருவத்தை பார்த்தேன்.."- பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7, இப்பொது நிறைவு பகுதிக்கு வந்துள்ளது.முதலில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்தது.

இந்நிலையில் விஷ்ணு, மாயா, மணிச்சந்திரா, தினேஷ் மற்றும் அர்ச்சனா ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களாக தற்பொழுது தேர்வாகியிருந்தனர்.


இந்த நிலையில் தற்பொழுது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா அவர்கள் டைட்டில் வின்னராகி 50 லட்சம் ரூபாய் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

நடன கலைஞர் மணிச்சந்திரா இரண்டாவது இடத்தையும், பிரபல நடிகை மாயா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அர்ச்சனா பிக்பாஸிற்கு செல்ல முதல் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.


அதில்,தான் ஒருநாள் சூட்டிங் முடிந்து காலைல 2 மணிக்கு வந்திட்டு இருக்கும் போது,நீல சேட் போட்ட ஒருத்தர் வந்திட்டு இருந்தாரு.அவர் கடந்து போய்டுவாரு என்று பார்த்தால் என்னை நோக்கி வாற மாதிரியே இருந்திச்சு. நான் வண்டியை எடுத்திட்டு வேகமாக போய்ட்டேன்.எனக்கு பேய் என்றாலே பயம் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement