• Jan 19 2025

என்னை அறியாமலேயே நடந்திருச்சு, பகிரங்கமாக கேட்டுக்கிறேன்- புகழைத் தொடர்ந்து கமலிடம் மன்னிப்புக் கேட்ட குரேஷி

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான் குரேஷி.இவருக்கு குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் பெரிய அளவில் புகழ் கிடைத்தது.தொடர்ந்து வெள்ளித் திரையில் கால் பதித்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.

 இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் துபாயில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் இருந்து வெளியான வீடியோ ஒன்று பெரிய அளவில் வைரல் ஆனது.அந்த வீடியோவில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்பொழுது போட்டியாளராக இருக்கும் மாயா ஆகிய இருவரையும் தொடர்புபடுத்தி சில ஜோக்குகளை குரேஷியும் புகழும் பேசியிருந்தனர்.


கடந்த சில தினங்களாக அந்த வீடியோ பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இது உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் புகழ்  அந்த வீடியோவுக்கு முதலில் மன்னிப்புக் கேட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குரேஷியும் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதாவது இந்த வீடியோ இரண்டு மாதங்களுக்கு முதல் நடந்த ஷோவில பண்ணினது. திடீர்னு பிக்பாஸ் சீசன் 7 பற்றி நடிக்க சொல்லிட்டாங்க, அதனால நிறைய விஷயங்கள் பண்ணினோம். ஆனால் மாயா கமல்சேர் பற்றி பேசின அந்த வீடியோ கட் மட்டும் வைரலாகி வருகின்றது.


அதை நாங்க பிளான் பண்ணி சொல்லல, அந்த டைம்ல செய்தது தான் கமல்சேர் ரசிகர்கள் எல்லோரும் எங்களை மன்னிச்சிடுங்க என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement