• Jan 18 2025

அது குட் டச்சா இல்ல பேட் டச்சா என்று கூட எனக்குத் தெரியாது- தனக்கு நடந்த கொடுமை குறித்து ஓபனாகப் பேசிய யாசிகா ஆனந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.தொடர்ந்து  சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்த இவர், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.இருப்பினும் இவரைப் பிரபல்யப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த  நிகழ்ச்சிக்கு பின் தோழிகளுடன் ஜாலியாக காரில் சென்றபோது வேகமாக காரை ஓட்டி விபத்தில் சிக்கி சில மாதங்கள் படுத்தபடுக்கையாக இருந்தார். இந்த விபத்தில் அவரது தோழி உயிரிழந்தார். அதன் பின் பழைய நிலைக்கு திரும்பிய யாஷிகா ஆனந்த், திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் யாஷிகா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பொது இடத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து பேசி உள்ளார். அதில், நடிகர் சந்தானத்துடன் இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, எனக்கு ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்து தவறான இடத்தில் தொட்டான்.

அந்த வயதில் அது குட் டச்சா இல்ல பேட் டச்சா என்று கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும், உடனே நான் அப்படியே திருப்பி, எட்டி உதைத்துவிட்டேன். அவன் அப்படியே விழுந்துவிட்டான். அவன் ஏன் அடிச்ச என்று எப்படி கேட்க முடியும், அது தான் என் தைரியம். நான் 13 வயதாக இருக்கும் போதே அப்படி செய்து இருக்கிறேன். பெண்களுக்கு தைரியம் தான் முக்கியம் என்று யாஷிகா ஆனந்த் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement