• Mar 25 2026

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நடிகர் பிரேம்ஜி- இந்த ஆண்டு திருமணமா?- செம சர்ப்ரைஸாக இருக்கே...

stella / 2 years ago

Advertisement

Listen News!


2003ம் ஆண்டு தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்க தொடங்கியவர் நடிகர் பிரேம்ஜி அமரன். காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியாவார், கங்கை அமரனின் மகனும் ஆவார்.

 பிரேம்ஜி புன்னகை பூவே,  விசில்,  கண்ட நாள் முதல்,  வல்லவன்,  சென்னை 600028, சத்தம் போடாதே,  தோழா,  சந்தோஷ் சுப்பிரமணியம், சத்தியம், சரோஜா,  சிலம்பாட்டம்,  கோவா,  மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதில் மங்காத்தா,  சிலம்பாட்டம் மற்றும் கோவா உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. மங்காத்தா படத்தில் நடித்ததற்காக இவர் எடிசன் அவார்ட் ஃபார் பெஸ்ட் காமெடியன் விருதும் வென்றுள்ளார்.


இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். அதை வைத்தே அவரை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள், அவரும் ஜாலியாகவே அதை எடுத்துக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் இந்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement