தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க தலைவராக இருந்தவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம். அதோடு மட்டுமல்லாமல், கோவை இஈரோடு நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கும் தலைவராக இருந்து வந்தார். இதில் அவ்வப்போது திரையரங்குகள் குறித்து எழும் புகார்கள் குறித்து யூடியூடிப் சேனல்களுக்கு அளிக்கும் பேட்டியில் விளக்கம் அளித்து வந்தார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான லியோ படம் குறித்து கருத்து தெரிவித்திருந்த திருப்பூர் சுப்பிரமணியம், 'லியோ படம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம். தெரிந்தேதான் இந்த படத்தை திரையிட்டோம். ஏனென்றால் தீபாவளி வரை வேறு புதிய படங்கள் எதுவும் இல்லை' என்று கூறியிருந்தார்.
இதனிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சி திரையிட அரசு அனுமதி அளிக்காத நிலையில், திருப்பூரில் உள்ள சுப்பிரமணியனின் சொந்த திரையரங்கில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக திரைப்படம் திரையிடப்பட்டதாக புகார் எழுந்துது.
எனவே,இதுகுறித்து விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவர் விளக்கும் கொடுப்பதை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுப்பிரமணியன் அதிரடியாக தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், எனது சொந்த வேலை காரணமாக நமது சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் நானும் மனிதன் தான் 100 சதவீதம் தவறில்லாமல் இருக்க முடியாது. 10 சதவீதம் தவறு இருக்கத்தான் செய்யும். நல்ல பெயருடன் வெளியே செல்ல விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
Listen News!