• Jan 19 2025

த்ரிஷா குஷ்பு, சிரஞ்சீவி மூவர் மீதும் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன்" -திரும்ப முதலில் இருந்து ஆரம்பித்த மன்சூர் அலிகான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மன்சூர் அலிகான் லியோ படத்தில் தனக்கும் த்ரிஷாவுக்கும் பெட்ரூம் காட்சி வைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். த்ரிஷாவை கண்ணில் கூட காட்டவில்லை என அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். இந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் நடிகை த்ரிஷா இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

த்ரிஷாவுக்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன, குஷ்பு ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து நடிகர் சங்கம் சார்ப்பிலும் மன்சூர் அலிகான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.


ஆனால், தான் தவறாக ஏதும் பேசவில்லை என மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இதனை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுக்க, மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் கடிதமும் அனுப்பியது.இதனையடுத்து, மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்

இதனால் மன்சூர் அலிகான் த்ரிஷாவைத் தவறாகப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்டிருந்தார். இத்துடன் இந்தச் சர்ச்சை முடிவு பெற்றிருக்கும் என்று நினைத்த நிலையில் தற்பொழுது ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது த்ரிஷா குஷ்பு, சிரஞ்சீவி மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடரவுள்ளதாக மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். கிரிமினல், பொது அமைதியை கெடுத்தது ஆகிய பெயரிலேயே வழக்கினைத் தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement