• Jan 19 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன், அதான் காரின் மீது இருக்கிறேன்- நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானர் தான் நடிகர் மன்சூர் அலி கான்.அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த இவர் தற்பொழுது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்.அந்த வகையில் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ படத்தில் நடித்திருந்தார்.

அத்தோடு அண்மையில் நடிகை த்ரிஷா பற்றி தவறாகப் பேசி பல சரச்சைகளையும் சந்தித்தார்.பின்னர் த்ரிஷாவிடம் பகிரங்கமாகவும் மன்னிப்புக் கேட்டிருந்தார்.தற்போது சென்னை வெள்ளம் பற்றி மன்சூர் அலி கான் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.


அதில் அரும்பாக்கத்தில் இருக்கிறேன். 100 மீட்டர் தூரத்தில் கூவம் ஆறு இருக்கிறது. டேம் தண்ணி திறந்துவிட்டால் தண்ணீர் வந்துவிடும். ஒண்ணுமே பண்ண முடியாது.

எல்லாரும் தாழ்வா கட்டிட்டாங்க. நான் கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பிவிட்டேன். ஆனால் மீன் வீட்டுக்குள்ள வந்துடுச்சு. செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருவது மிகப்பெரிய அதிசயம். வறுத்து சாப்பிட்டது போக மிச்சம் கொஞ்சம் மீன் இருக்கு. இனி பொரிச்சி சாப்பிடணும்.

எல்லாத்துக்கும் கார்ப்பரேஷன் மற்றும் கவமென்ட்டை குறை சொல்லிட்டு இருக்க முடியாது. பல இடங்களில் ஏரியை ஆக்ரமித்து கட்டப்பட்டு இருப்பதால் இந்த வேதனையை தாங்க வேண்டியதாக இருக்கு என பேசியுள்ளார் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement