• Jan 19 2025

விஜயகாந்தை நினைத்து நினைத்து கவலையில் இறந்த பிரபலம்- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

திரைத்துறையில் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக இருந்தவர் தான் வேலுமணி. இது தவிர இயக்குநர் வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுபார், ரிதம், உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே விஜயகாந்தின் தீவிர ரசிகரான இவருக்கு, விஜயகாந்த் நடித்த தேவன் படத்தில்,வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.சினிமா மட்டும் அல்லாமல், விஜயகாந்த் அரசியல் சம்பந்தமாகவும், அரசியல் மேடைகளில் பேசுவது குறித்தும் வேலு மணியிடம் கலந்து ஆலோசிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். 


விஜயகாந்த்தின் அன்பை பெற்ற இவர், அவர் உடல் நலிவடைந்து  ஒய்வில் இருந்த போதும் ஒரூரி முறை சந்தித்து வந்துள்ளார். இந்த தருணத்தில் விஜயகாந்த் பற்றிய அவதூறு செய்திகள் பரவி வந்த நிலையில் அதை நினைத்து நினைத்து அதிக கவலை பட்டுள்ளார்.

சரியாக சாப்பிடாமல், மன குழப்பத்துடன் காணப்பட்ட வேலுமணி, இன்று காலை திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த வேலுமணி தன்னுடைய சகோதரன் மற்றும் சகோதரியின் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.


 இவரின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான கடலூரில் நடைபெறும் என கூறப்படுகிறது.இதனால் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement