தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் மூணார் ரமேஷ். இவர் அண்மையில் வெளியான லால் சலாம் படத்தில் சிறப்பான குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மூணார் ரமேஷ் இதற்கு முன்னர் தீண்ட தீண்ட, தலைநகரம், புதுப்பேட்டை, சிவாஜி, கிரீடம், பொல்லாதவன், பீமா, ஆடுகளம், ஜெயம் கொண்டான், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால், அது செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் தான்.
புதுப்பேட்டை திரைப்படத்தில் அவர் தனுஷுக்கு அப்பாவாக நடித்திருப்பார். அதன் போது அவர் பேசிய வசனங்கள் கடவுள் இருக்கான் குமாரு, அத உள்ள வை குமாரு ஆகிய வசனங்கள் இன்றைக்கும் மீம்ஸ்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் ஒரு ரஜினி ரசிகன் என்றும் தனக்கு நடந்த துயர சம்பவங்கள் குறித்தும் மனம் திறந்து உள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,
நான் சின்ன வயசுல இருந்தே தீவிரமான ரஜினி ரசிகன். நடந்தால் கூட ரஜினி போலத்தான் நடப்பேன். நான் படிக்கும் போது அவரது காளி படத்தின் போஸ்டரை தனது நோட் அட்டையில் ஒட்டிக்கொண்டேன்.
இதற்காக ஆசிரியர்கள் என்னை சரமாரியாக அடித்தார்கள். அவர்கள் அடிக்கும் போது கூட நான் ரஜினி போலத்தான் கையை நீட்டினேன்.
ரஜினியின் படங்களில் எனக்குப் பிடித்த படம் என்றால் அது ஜானி தான். நான் இளைஞன் ஆக இருந்தபோது அங்கு ஊரில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் நான் தான். அப்போ என்ன எல்லாரும் ரஜினி ரசிகன் என்று தான் அழைப்பார்கள். தலைவர் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்பதற்கு கணக்கே இல்லை. அவரது ஆன்மீகமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
மேலும், நான் சவுதி அரேபியாவில் இருந்த போது, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் போது அது பெரிய தாக்கம் ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் இருந்து அங்கு வேலைக்கு வந்த பலர் அங்கு பெரும் அவதியை சந்தித்தார்கள்.
அப்போது என்னை எந்த நாடு அதிகாரி ஒருவர் கேட்க, நான் அதற்கு இந்தியன் என கூறினேன். அதன்பின் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு காரி துப்பினார்கள் என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
இதேவேளை, இறுதியாக லால் சலாம் படத்தில் சாதி மதங்களை விட்டுவிட்டால் நமது நாடு நன்றாக இருக்கும் என்பதை தான் அதில் கூறியுள்ளோம் என்றார்.
Listen News!