• Jan 19 2025

பிக் பாஸ்ல டீம் C யும் இருந்துச்சு.. ஆனா..? ஷகிலா கேட்ட கேள்வியில் உண்மையை கக்கிய மணி

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதலாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றவர் தான் மணி சந்திரா. இவர் பிக் பாஸ் வருவதற்கு முன்பே பிரபலமாக காணப்பட்டார்.

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக பணியாற்றி வரும் மணி சந்திரா, விஜய் டிவியில் ஒளிபரப்பான  'ஜோடி நம்பர் 01' என்ற  ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

வெளிநாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கொரியோகிராபி பண்ணி கொடுப்பதில் கை தேர்ந்தவராக காணப்பட்டார் மணி.


இந்த நிலையில், நடிகை ஷகிலாவுடன் சுவரஸ்யமாக பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார் மணி. அதில் என்ன கூறியுள்ளார் என பார்ப்போம்..

இதன் போது பேசிய ஷகிலா, எப்படி இருந்துச்சு...பிக் பாஸ் லாஸ்ட் மொமெண்ட்ல உங்க கை தூக்காம அர்ச்சனா கை தூக்கினது என கேட்க,


நான்  பிக் பாஸ்க்கு உள்ள போறதுக்கு முன்னாடி எனக்கு என்னன்னு தெரியல ரன்னருக்கு தான் ஆசை பட்டேன், என்னோட குருநாதர் சாண்டி மாஸ்டர் தான். சோ எனக்கு என்னனு தெரியல அது என்ன ரீசன் என்றும் தெரியல, எனக்கு வின்னர் அப்படின்னு அந்த ஒரு கிரீடத்தை விட ரன்னர் அப்பிடி என்ற கிரீடத்தை தான் பிடிச்சி இருக்கு. அதுக்கு தான் ஆசை பட்டேன்.

மேலும் அச்சினாவின் கையை தூக்கிய போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். எனக்கு இந்த பணப்பெட்டி, டைட்டில் வின்னர் ஆகிறது எல்லாம் சந்தோசம் இல்லை. ரன்னர் ஆனது தான் சந்தோசம் என்றார்.


இதை தொடர்ந்து நீங்க டீம் ஏயா இல்லை டீம் பியா என ஷகிலா கேட்க, நான் டீம் B தான் அது மக்களுக்கே தெரியும் அப்படி என்று மணி சொல்கிறார்.

மேலும் அர்ச்சனா டீம் A ல தான் இருந்தாங்களா? என கேட்க,  எனக்கு  தெரியலங்க.. அவங்க டீம் A  னும் சொல்ல முடியாது டீம் B னும் சொல்ல முடியாது. அவங்க தனியா டீம் C ல இருந்தாங்க என்று தான் சொல்லணும் என்றார்.

மேலும் மாயா பற்றி கேட்க, மாயா பிக் பாஸ் வீட்டில் வேற ஒரு கண்டென்ட்  எடுத்து கேம் விளையாடிட்டு இருந்தாங்க.. ஆனா எனக்கு அதை செட் ஆகல.,அது ஜாலியா தான் இருந்துச்சு.. ஆனா  நான் கேட்டன் நீங்க என் பக்கம் வாங்க, ரெண்டு பேருமே செட்டான கேம் வேற லெவல்ல போகும் என்று.

ஆனா அவங்க சொன்னாங்க, நீங்க அங்காள பக்கம் இருங்க.. நான் இங்காள பக்கம் இருக்கன்.. என்று இவ்வாறு ஒவ்வொருவர் பற்றியும் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார் மணி.




Advertisement

Advertisement