• Jan 19 2025

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான 'ஆவேஷம்' படம் எப்படி? வெளியான விமர்சனங்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளத்திலும் பிரபலமான இயக்குனர் தான் பாசில். அவரது மகனான ஃபஹத் ஃபாசில் தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம்வருகிறார்.

இவர் அறிமுகமான சில படங்கள் அவருக்கு ஆரம்பத்தில் சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. இருந்தாலும் தனது திறமையின் மூலம் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றிபெற்றார். இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் பகத் பாஸிலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.


இதனை தொடர்ந்து,  ஃபஹத் ஃபாசில் தமிழில் வில்லனாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும் அவரை ஹீரோவாக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ரசிகர்களிடம் இருக்கிறது. 


இந்த நிலையில், பஹத் பாசில் நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’(Aavesham) மலையாளப் படத்திற்கு ட்விட்டரில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.


அதன்படி, 'ஆவேஷம்' படத்திற்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன. இப்படத்தின் கதைக்களம் மற்றும் ஃபஹத்தின் அடவடியான நடிப்பை  ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.  மேலும், இந்த படத்தின் கடைசி சண்டைக் காட்சியை வெகுவாக பாராட்டி உள்ளனர். 

'ஆவேஷம்' திரைப்படம், கேளிக்கைகளை விரும்பும் பார்வையாளர்களிடம் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. திரைப்படத்தின் அணுகுமுறை பார்வையாளர்களுடன் நன்றாக இணைந்துள்ளது.  இந்த திரைப்படத்தின் ஆக்‌ஷன் நிரம்பிய காட்சிகள், நகைச்சுவை தருணங்கள் மற்றும் கவர்ச்சியான கதைக்களம் குறித்து தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement