காதல் மன்னனாக பெண்களின் மனதை கவர்ந்த நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி,குட் பாட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.நடிப்பு ஒரு பக்கம் இருக்க கார் ரேசிங்கில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வரும் இவர் சமூகவலைத்தளங்களில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை.

இருப்பினும் அவரது மனைவியான நடிகை ஷாலினி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதிக ரசிகர் பட்டாளத்தை தன் வசமாக்கிக் கொண்ட இவர் தற்போது தனது ரசிகர் ஒருவரின் தாயுடன் விடியோகோலின் மூலம் உரையாடிய வீடியோ பதிவு ஒன்றினை தலை ரசிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Listen News!