தென்னிந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு பெற்ற ஹீரோவில் ஒருவராக துல்கர் சல்மான் விளங்குகின்றார். மலையாள திரையுலகத்தில் தனது தனித்துவமான கதையமைப்பில் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் பிஸியாக செயற்பட்டு வரும் இவர், தற்போது 'Im Game' என்ற படத்தில் மாபெரும் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகின்றார்.
இந்தப் படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கி வருகின்றார். இவர் முன்பு இயக்கிய படங்கள் வலிமையான கதை, சண்டைக் காட்சிகள் மற்றும் வித்தியாசமான நடிப்பு என்பன மூலம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் ‘Im Game’ படமும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாகி வருகின்றது.
இப்போது இந்தப் படத்தில் ‘கட்சி சேர..' பாடல் மூலம் புகழ்பெற்ற நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் இணைந்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தமிழ், மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளில் வலம் வருபவரான சம்யுக்தா, ஒரு நல்ல நடிப்புத்திறன் கொண்ட நடிகையாக மக்களைக் கவர்ந்துள்ளார்.
தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் துல்கருடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருப்பது பெரும் திருப்புமுனை என ரசிகர்கள் கூறுகின்றனர். இதுவரை சம்யுக்தா நடித்திருக்கும் படங்களில், அவருடைய கதாப்பாத்திரங்கள் சிறப்பாகவே காணப்படுகின்றன. ‘Im Game’ படத்தில் அவர் எந்த வகையான கேரக்டரில் நடிக்கிறார் என்பது தற்போது தயாரிப்பு குழுவால் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் தற்போது பன்மொழி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இதில் தமிழ் நடிகர்கள் அதிக அளவில் இணைந்திருப்பதே ஆகும். குறிப்பாக, இயக்குநர் மற்றும் நடிகர் மிஷ்கின் மற்றும் கதிர் ஆகியோர் முக்கியவேடத்தில் நடிக்கின்றனர்.
Listen News!