தமிழ் திரையுலகில் முன்னணியில் திகழும் நடிகர் காளிதாஸ் ஜெயராம், போர் , இந்தியன் 2 மற்றும் ராயன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மனிதநேய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் அப்சரா ரெட்டி குறித்து உருக்கமாக பேசிய அவர், உண்மையான ஹீரோ அவங்க தான் என்று பாராட்டினார்.
இந்தியாவில் சமூக சேவையில் மாற்றங்களை ஏற்படுத்தும் நபர்களுக்கு வழங்கப்படும் மனிதநேய விருது, இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் இதில் பங்கேற்று கௌரவிக்கப்பட்டனர். அதில் பத்திரிகையாளர் மற்றும் சமூக சேவகர் அப்சரா ரெட்டி முக்கிய விருதைப் பெற்றார்.
விழாவில் பேசிய காளிதாஸ் ஜெயராம் , "அப்சரா ரெட்டியைப் பார்த்து உண்மையான ஹீரோ எனக் கூறியதுடன் நானும் சமூகத்திற்காக என்னால் முடிந்ததை நிச்சயமாக செய்வேன்" என்று உருக்கமாக தெரிவித்தார்.
அவருடைய இந்த பேச்சு நிகழ்வில் இருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றது. அப்சரா ரெட்டி பெண்களுக்காகவும் சமூக நீதிக்காகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், இந்த விருதுக்கு அவர் தகுதி பெற்றதாக பலரும் பாராட்டினர். அவருடைய இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!