தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. 'கீதா கோவிந்தம்', 'புஷ்பா', 'வாரிசு' போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய பல மொழிகளில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தார். தற்போது, இவர் நடிக்க உள்ள புதிய படமான ‘MYSAA’ பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் பூஜை நிகழ்வு இன்று (ஜூலை 27, 2025) பிரமாண்டமாக நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா, சேலையில் பளிச்சென வைக்கும் தோற்றத்தில் அசத்தியிருந்தார்.
இவருடன் இயக்குநர், தயாரிப்பாளர், தொழில்நுட்பக் குழுவினரும் பங்கேற்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பட பூஜை முடிந்ததும், தயாரிப்பாளர்கள் வெளியிட்ட புகைப்படங்கள், ராஷ்மிகாவின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!