• Apr 15 2026

20 கோடியை செலுத்த வேண்டும்.! நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்.. வெளியான தகவல்கள் இதோ

shali / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவை தாண்டி சர்வதேச அளவிலும் தனது நடிப்பால் கவனம் பெற்றிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பல வெற்றித் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் அவர் மீது, ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் சட்டநடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது என்ற தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிடைத்த தகவல்களின் படி, அந்த தயாரிப்பு நிறுவனம் தனது நோட்டீஸில், “புதிய படத்தில் நடித்து, அதனைத் தானே இயக்குவதாக தனுஷ் உறுதி அளித்தார். அந்த திட்டத்தை முன்னெடுக்க முன்பணிகள், கதை மேம்பாடு, தொழில்நுட்ப குழு ஒப்பந்தம், லொக்கேஷன் உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் ரூ.20 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.” என்று கூறப்படுகிறது.

மேலும், “வாக்குறுதியின்படி படம் தொடர்பான பணிகளில் உடனடியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் தெளிவான பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் இதுவரை செலவிடப்பட்ட ரூ.20 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டும்” என்றும் அந்த சட்ட நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement