• Feb 14 2026

"இதயம் முரளி" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! என்ன தெரியுமா.?

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

நடிகர் அதர்வா நாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் “இதயம் முரளி” குறித்து ரசிகர்களுக்கு உற்சாகமான அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் மலையாள சினிமாவின் திறமையான நடிகர் பகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால், படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


“இதயம் முரளி” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதுவரை தயாரிப்பாளராக தனது திறமையை நிரூபித்துள்ள அவர், இந்த படத்தின் மூலம் இயக்குநராக புதிய பாதையை தொடங்குகிறார். 

இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து நடிகைகள் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரக்‌ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலின் உள்ளிட்டோர் படத்தில் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.

இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீப காலங்களில் தரமான மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களை வழங்கி வரும் இந்த நிறுவனம், “இதயம் முரளி” படத்திலும் அதே தரத்தை பேணும் வகையில் பெரும் முயற்சி எடுத்துள்ளது என கூறப்படுகிறது.


இந்நிலையில், “இதயம் முரளி” திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, அதர்வா மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ள இந்த படத்தின் பாடலான ‘வான் வான்’ இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்பட உள்ளது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement