• Apr 15 2026

சாந்தனுவின் மனைவி கீர்த்திக்கு குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.! வைரல் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் – பூர்ணிமா தம்பதியின் மகன் நடிகர் சாந்தனு. இவர் சக்கரைகட்டி, அம்மாவின் கைபேசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

அவரது நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத போதும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடித்துவரும் சாந்தனு, சமீபகாலமாக தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். 

குறிப்பாக,  ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த படத்தில் சாந்தனு நடித்த கதாபாத்திரமும் அவரது நடிப்பும் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.


நடிகர் சாந்தனு, பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான கீர்த்தியை காதலித்து 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை நடிகர் விஜய் நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு திருமணம் ஆகி தற்போது 10 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சாந்தனு மற்றும் கீர்த்தி தம்பதி, குழந்தை பெற்றுக்கொள்ளாத காரணத்தால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், சாந்தனுவின் மனைவி கீர்த்தி தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement