விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று விரிவாக பார்ப்போம்.
ஏற்கனவே மீனா பிரியாணி செய்வதற்காக சிக்கன் வாங்க கடைக்கு தனக்கு தெரிந்த அக்காவுடன் செல்கின்றார். அங்கு அவர் ரோகினியின் மலேசிய மாமாவான கறிக்கடைக்காரரின் கடைக்கு மீனாவை கூட்டிச் செல்கின்றார்.
இதன் போது கறிக்கடைக்காரர் மீனாவை பார்த்தவுடன் தலையில் துண்டைப் போட்டு மறைத்து தப்பி விடுகின்றார். மீனாவும் அவரை பார்க்காமல் வந்து விடுகின்றார். ஆனாலும் இனிமேல் இந்த கடையில் வந்து சிக்கன் வாங்குமாறு அவருடன் சென்றவர் மீனாவுக்கு சொல்லி கூட்டி வருகின்றார்.
d_i_a
இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில் வித்யா வீட்டுக்குச் சென்ற கறிக்கடைக்காரர் மீனா வந்த விஷயத்தை சொன்னதோடு தான் ஏதோ கஷ்டத்தில் உங்களுக்கு உதவி செய்ததாகவும் ஆனால் தனது தொழிலுக்கும் தனக்கும் எதுவும் பிரச்சனை வந்தால் முதலில் உங்களுடைய பெயரை தான் சொல்லுவேன் என்றும் ரோகினிக்கு சொல்லுகின்றார்.
இதை கேட்ட ரோகிணி அதிர்ச்சியாகி நிற்கின்றார். எனவே ரோகிணி செய்த சதி வேலைகள் எல்லாம் மீண்டும் அவரை தாக்குவதற்கு ரெடியாகிவிட்டது. சிட்டியும் தனக்கு பிரச்சனை என்றால் முதலில் உங்களுடைய பெயரை தான் சொல்லுவேன் என்று ரோகினியை மிரட்டி இருந்தார்.
அது போலவே கறிக்கடைக்காரரும் தனக்கு பிரச்சனை வந்தால் முதலில் உங்களுடைய பெயரை தான் சொல்லுவேன் என்று சொல்லிச் செல்கின்றார். இவற்றில் இருந்து ரோகினி எப்படி சமாளிக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!