• Jan 18 2025

தனுஷ் தொடர்ந்த வழக்கில் மொத்தமா சிக்கிய மூவர்.? உரிய பதில் அளிப்பாரா நயன்தாரா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில், எதிர்வரும் ஜனவரி எட்டாம் தேதிக்குள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நயன்தாராவின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய காதல் வாழ்க்கையை மையமாகக் கொண்டு திருமண காட்சிகளுடன் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.  அதற்கான டிரைரும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

d_i_a

இவ்வாறு வெளியான டிரைலரில் நானும் ரவுடிதான் படக்காட்சி இடம் பெற்றது. அந்த காட்சியை தனது அனுமதி இன்றி பயன்படுத்தியதாக தனுஷ் தனது வழக்கறிஞர் மூலம் 10 கோடி ரூபாய்  இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.


இதை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பில் நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தது. இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.

இதன் போது நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் எதிர் வரும் ஜனவரி 8-ம் தேதிக்குள் இதற்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கின் இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையும் ஜனவரி 8ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement