• Jan 19 2025

ஹெல்த் பிராப்ளம்.. பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேறிய ரவீந்தர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இம்முறை ஆண்கள், பெண்கள் என்று டீம் பிரிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் 18 போட்டியாளர்கள், இரண்டு வீடு என அமர்க்களமாக காணப்பட்டது. அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக 5 வைல்ட் கார்ட் என்ட்ரி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அதன் பின்பு ஆட்டமே சூடு பிடித்தது.

பிக் பாஸ் சீசன் 7ல் இறுதியாக டைட்டிலை வெற்றி பெற்றது வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வந்த அர்ச்சனா ரவீந்திரன் தான். இவருக்கு அந்த சீசனில் பங்கு பற்றி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப்பின் ரசிகர்களும் முழு சப்போர்ட் பண்ணினார்கள்.


தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் அதிரடியாக ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நகர்கின்றது. அதற்கு காரணம் 24 மணி நேரத்தில் நடந்த எலிமினேட் தான். ஆனாலும் இந்த சீசனில் விஜய் டிவி பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டதாக சர்ச்சைகளும் எழுந்தன.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளாராம். தற்போது இந்த தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement