• Jan 19 2025

ஒரு மாசமா இழுத்துகொண்ட கிடந்த அமரனை ஒரே நாளில் முடித்துவிட்ட பிளடி பெக்கர்??

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன் பின்பு வெள்ளித் திரையில் கால் பதித்தவர்களுள் சிவகார்த்திகேயன் மற்றும் கவின் ஆகியோருக்கு முக்கிய இடம் காணப்படுகின்றது. இவர்கள் தமது முயற்சியினால் இன்று  தமிழ் சினிமாவில் பேசப்படும் முக்கிய  நாயகர்களாக வலம் வருகின்றார்கள்.

சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பின்பு திரைப்படத்தில் தனுசுக்கு நண்பராக நடித்தார். இதை தொடர்ந்து மனம் கொத்தி பறவை படத்தில் நாயகனாக களம் இறங்கினார். இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது எதிர்நீச்சல் தான். அதன் பின்பு சிவகார்த்திகேயன் தனக்கேற்ற திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

அதேபோல நடிகர் கவினும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி லிப்ட் படத்தில் ஹீரோவாக நடித்தவருக்கு டாடா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின்பு ஸ்டார் படத்தில் நடித்தார். தற்போது பிளடி பெக்கர் படத்தில் நடித்து வருகிறார்.


தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படமும் கவின் நடிக்கும்  பிளடி பெக்கர் திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆக உள்ளது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படத்தின் டீசர் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் பார்வையாளர்களை அடைவதற்கு ஒரு மாதம் எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வெளியான  பிளடி பெக்கர் திரைப்படம் 2.2 மில்லியங்களை 14 மணித்தியாலத்திற்குள் அடைந்துள்ளது. இது கவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இதன் காரணத்தினால் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என்று பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் அப்படி எல்லாம் இல்லை அடுத்த தளபதி கவின் தான் என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement