• Sep 12 2025

அவர் எனக்கு தம்பி போல ..! TVK பற்றிய கேள்விக்கு ஒரே பதிலில் கமல்ஹாசன் அடிச்ச சிக்சர்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின்  இரண்டாவது  மாநாடு நேற்றைய தினம்  மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு விக்ரவாண்டியில் நடைபெற்றது.  அதன்பின் இரண்டாவது மாநாடு நேற்றைய தினம்  மதுரையில்  நடத்தப்பட்டது.. இதில்  விஜய் பேசிய  கருத்துக்கள்  சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  சென்னை விமான நிலையத்தில்  வைத்து கமலஹாசனிடம்  தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜயின் கருத்துக்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசன் கொடுத்த ரியாக்ஷன் தற்போது வைரலாகி வருகின்றது. 


அதாவது விஜய் மாநாட்டில் பேசும் போது,  நான் மார்க்கெட்  இழந்த பிறகோ, ஓய்வு பெற்ற பிறகோ அரசியலுக்கு வரல..  படை கலத்துடன் வந்திருக்கன்..  அதற்கு காரணம் 30 வருஷத்துக்கு மேல என்னோட நீங்க துணை நிற்கின்றீர்கள்.. அதற்கான நன்றி கடன் தான் இது. உங்களுக்கு உண்மையாகவே நின்று சேவை செய்ய  வந்துள்ளேன்..  சொல் இல்லை செயல்தான் முக்கியம்  என்று தெரிவித்திருந்தார். 


விஜயின் இந்த கருத்து பற்றி கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல், விஜய் யாருடைய பெயரையாவது குறிப்பிட்டுச் சொன்னாரா? இல்லை என் பெயரைச் சொன்னாரா?  அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா? அவர் எனக்கு தம்பியை போன்றவர்... என  செய்தியாளர்களுக்கு பதில் அளித்து விட்டு சென்றுள்ளார். 


 

Advertisement

Advertisement