• Jan 20 2025

500 படங்கள் சாதனையை இவர் முறியடிக்க வேண்டும்! மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்காசன் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களுக்கு  இன்னொரு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதும் அது இணையத்தில் வைரலாக்குவதும் வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாறு இருக்கும் மோகன்லாலுக்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மோகன்லால்  இந்திய நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட விநியோகர் மற்றும் இயக்குனர் என அனைத்திலும் பணியாற்றியவர் ,  பெரும்பாலும் மலையாள, கன்னட சினிமாத் துறையில் பணிபுரியம் இவர் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணிக் கதாநாயகராகத் திகழ்கிறார்.மேலும், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இந்த நிலையிலேயே இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு கமல்காசன் தனது X தல பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "நாற்பது ஆண்டுகளாக மிகவும் விமர்சன மற்றும் விவேகமான பார்வையாளர்களிடையே மனிதனை வழிநடத்துங்கள். 400 படங்களா? சிலர் அவநம்பிக்கையில் கூச்சலிடலாம். மாறாக, திரு.பிரேம் நசீரின் 500 படங்களின் சாதனையை அவர் முறியடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரது பிறந்தநாளில், அதுவே அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்து. உங்களுக்கு சிறந்த ஆரோக்கியம், திரு. மோகன்லால் இன்னும் பல சாதனைகளை முறியடிக்க வேண்டும்." என குறிபிட்டுள்ளார்.

 

Advertisement

Advertisement