விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறகடிக்க ஆசை சீரியலில் இதுவரை ரசிகர்கள் எதிர்பார்த்த மிகப்பெரிய சம்பவம் ரோகிணி எப்போது வீட்டில் வசமாக சிக்குவார்? என்பது தான். அதன்படி தற்போது ஒவ்வொரு விடயத்திலும் வசமாக சிக்கி வருகின்றார்.
ஏற்கனவே தனது குழந்தையை கிராமத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து அங்கு சாதாரணமான ஒரு பாடசாலையில் சேர்க்கின்றார். அப்போது தான் யாரும் அங்கு வர மாட்டார்கள் என்று கணக்கு போடுகிறார். ஆனால் எதிர்பார்க்காத வகையில் அங்கு வேலைக்கு சேருகின்றார் அண்ணாமலை.
இதை தொடர்ந்து கனடாவில் இருந்து மீண்டும் வந்த ஜீவா தான் மனோஜின் முன்னாள் காதலி என முத்து அறிந்து கொள்கின்றார். அதன் பின்பு நேரடியாகவே சென்று தனது அப்பாவின் மொத்த உழைப்பையும் திருடிட்டு போனாய்.. அந்த காசு வேண்டும் என்று கேட்க, ஜீவா எல்லா உண்மையும் சொன்னதோடு விஜயா வீட்டுக்கு வந்து நேரடியாகவே ரோகிணியை போட்டுக் கொடுத்தார்.
இதை எல்லாம் அறிந்த விஜயா ரோகிணியை பளார் பளார் என அறைந்து இருந்தார். எனினும் அந்த நேரத்திலும் தான் மனோஜுக்காக தான் எல்லாம் பண்ணினேன்.. நான் இவ்வாறு செய்யவில்லை என்றால் அவர் வெட்டியாக பார்க்கில் படுத்து தூங்கி இருப்பார் என்று பிளேட்டை திருப்பி போடுகின்றார். இவ்வாறு இந்த சீரியல் நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாரஸ்யமாக செல்லுகின்றது.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா தனது instra பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
அதில் பார்ப்பதற்கு கிராமத்து நபர் போல சாரம், கழுத்தில் துண்டு உடன் கோழிக்குஞ்சு ஒன்றைப் பிடிக்கின்றார் மனோஜ். அதனை உரியவர்களிடமே கொண்டு ஒப்படைக்கலாம் என செல்லும்போது அந்த கோழி குஞ்சு பறந்து விடுகின்றது. தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Listen News!