• Nov 22 2025

ரீல்ஸுக்காக இசையமைக்க கூடாது.! இசை உலகை சிந்திக்க வைத்த ஜி.வி. பிரகாஷின் கருத்து.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் ஜி.வி. பிரகாஷ் குமார்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தற்போதைய இசை நிலைமை, ரீல்ஸ் கலாசாரம் மற்றும் இசையமைப்பாளர்களின் பொறுப்பு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.


ஜி.வி பிரகாஷ் பேட்டியின் போது, தனது இசை பயணத்தின் தொடக்கத்தை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது, “என் முதல் படம் வெயில் பண்ணும் போது அது ஹிட் ஆன பிறகு தான் அடுத்த படம் இசையமைச்சேன். சாய் அப்யங்கர் நிறைய படம் கமிட் ஆகுறார் என்றால் அது அவர் விருப்பம். 

ரீல்ஸுக்காக இசையமைக்க கூடாது. ரீல்ஸுக்காக ஒரு பாட்டு பண்ணலாம்... அதுக்காக எல்லா பாட்டுமே பண்ண முடியாது. இதை நான் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். "என்றார். 

‘வெயில்’ திரைப்படம் ஜிவிக்கு ஒரு புது அடையாளத்தை அளித்தது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வெற்றிக்குப் பிறகு அவர் பல ஹிட் படங்களில் இசையமைத்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement