ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ’ரிபெல்’ என்ற திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் திடீரென இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் உள்பட பல திரையரங்குகளில் இந்த படம் இன்னும் ஒரு காட்சி மற்றும் இரண்டு காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதிரடியாக அமேசானில் வெளியானது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புதிய திரைப்படம் வெளியாகி நான்கு வாரங்கள் அல்லது ஒரு மாதம் கழித்து தான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் இந்த படம் எப்படி இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியானது எப்படி என்பது புரியாத புதிராக இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தின் ஹீரோ ஜிவி பிரகாஷ்-க்கு தெரியாமல் ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என்றும் அவர் நினைத்தால் ஓடிடியில் வெளியாகி இருப்பதை தடுத்திருக்கலாம் என்றும் எனவே அவரது படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அதேசமயம் கண்டிப்பாக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் இரண்டே வாரத்தில் ஓடிடியில் ரிலீசான ’ரிபெல்’ படத்தின் தயாரிப்பாளர் உட்பட படக்குழுவினர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
Listen News!