• Dec 04 2024

டாப் 10 தமிழ் சீரியல்கள்..TRP-யில் மாற்றம் !முன்னேற்றம் கண்ட விஜய் டிவி சீரியல்..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சீரியல் உலகில், பல்வேறு சீரியல்கள் தங்களின் புனைவுத் தன்மை, தாராளமான திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களின் நடிப்பின் மூலம் உயர்ந்த ரேட்டிங்குகளை பெற்று வருகின்றன. இங்கே இந்த வாரம் அதிக TRP பெற்ற தமிழ் சீரியல்களின் பட்டியல் முதலிடத்தில் கயல் - இளமையான கதாபாத்திரங்களுடன் கூடிய, குடும்பமான கதைக்களம் கொண்ட இந்த தொடர், அதிக ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. கதையில் வரும் மாற்றங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கின்றன.இரண்டாம் இடத்தில் மூன்று முடிச்சு - மூன்று மகளிரின் வாழ்க்கையில் நிகழும் சவால்களும், பரபரப்பான திருப்பங்களும் TRP-யில் முன்னிலையில் இருக்க காரணம்.மூன்றாம் இடத்தில் சிங்கப்பெண்ணே - தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை போராட்டத்தை மையமாகக் கொண்டு இன்றைய சமூகத்தை பிரதிபலிக்கும் சீரியல், பார்வையாளர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.மற்றும் தொடர்ந்து வரும் இடங்களில் மருமகள்,சுந்தரி,ராமாயணம் ,மல்லி சீரியல்கள் உள்ளன தொடர்ந்து 8 இடங்களில் சன் டிவி தொடர்களே காணப்படுகின்றன.


8,10ஆம் இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் பகுதி இரண்டு  9 ஆவது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பகி வரும் கார்த்திகை தீபம்  TRP-யில் முன்னிலை பெற்றுள்ளன இதேநேரத்தில் இந்த சீரியல்கள் TRP பட்டியலில் முன்னணியில் இருப்பதன் மூலம் தமிழ் தொலைக்காட்சி உலகில் பெரும் வெற்றியையும், பார்வையாளர்களின் முழு ஆதரவையும் பெற்றிருக்கின்றன.


Advertisement

Advertisement