• Jun 28 2024

பாக்கியா கேட்ட கேள்வியில் தலைகுனிந்த கோபி... ஈஸ்வரியால் கதறியழுத இனியா?

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சிரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி நடந்தவற்றை எண்ணி ஜோசித்துக் கொண்டு இருக்கிறார். கமலா அவரை கணக்கெடுக்காமல் செல்கிறார்.

அதன்பின், ராதிகாவிடம் சென்ற கோபி பேச முனைய, அவர் மீண்டும் கோவப்படுகிறார். மேலும் உங்க குடும்பம் தான் என் குழந்தையை கொன்னுட்டாங்க என சொல்லுகிறார்.

மறுப்பக்கம் ஈஸ்வரி அழுது கொண்டு இருக்க, ராமமூர்த்தி, பாக்கியா சமாதானம் சொல்லுகின்றார்கள். ஆனாலும் அவர் அழுது கொண்டிருக்க அருகில் இருந்த இனியா, நீங்க அழாதீங்க பாட்டி நீங்க நல்லவங்க நீங்க அழ  எனக்கும் அழுக வருது என அவரும் சேர்ந்து அழுகின்றார்.

இதை தொடர்ந்து பாக்யா இவற்றையெல்லாம் பார்த்துக் கொள்ள முடியாமல் ராதிகாவின் வீட்டுக்குச் செல்ல, அங்கு கமலா வாசலில் வைத்து பாக்யாவை சரமாரியாக கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்.


ஆனாலும் கமலாவை தாண்டி நான் ராதிகாவை பார்க்க வந்ததாக உள்ளே சென்ற பாக்கியா, அவரை நலம் விசாரிக்க., அதற்கு ராதிகா உங்களையும் நல்லவங்க  என்று நினைத்தேன் ஆனால், நான் பிரக்னண்டா இருக்கும்போது தான் உங்க முகத்தை பார்த்தேன் என பாக்யாவுக்கு சொல்ல, அவர் ஈஸ்வரி மீது எந்த தப்பும் இல்லை என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் நான் உங்களை ஒரு பிரண்டாக தான் பார்க்க வந்தேன் என சொல்லிச் செல்கிறார்.

வெளியே போகும்போது கோபி வந்து, இங்க என்ன பிரச்னை பண்ண வந்தியா எனக் கேட்க, அவங்க உங்க அம்மா பற்றி நம்பளாட்டியும் நீங்க உங்க அம்மாவை நம்புற இல்லையா? உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவங்க அவங்க.. அவங்க மேல இப்படி பலி போட்டுட்டீங்களே என கோபிக்கு புரிய வைத்து செல்கிறார் பாக்யா. இதனால் கோபி எதுவும் பேச முடியாமல் இருக்கின்றார்.

வீட்டுக்கு சென்ற பாக்யா ஈஸ்வரிக்கு மீண்டும் உணவு கொடுக்க அவர் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கின்றார். இதனால் அத்தையை கும்பகோணம் கோயிலுக்கு கூட்டிட்டு போகணும் என செல்வியுடன் பேசிக் கொண்டிருக்கிறார் பாக்யா இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement