தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் ‘சிக்மா’. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஆக்ஷன் மற்றும் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், சேலத்தில் நடைபெற்ற ‘சிக்மா’ ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பேசினார். அப்போது தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து ஜேசன் சஞ்சய் பேசிக் கொண்டிருந்தபோது, அரங்கில் இருந்த ரசிகர்கள் திடீரென “TVK... TVK... TVK...” என முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர்.
ரசிகர்களின் இந்த எதிர்பாராத முழக்கம் அரங்கையே அதிர வைத்த நிலையில், அதைக் கேட்ட ஜேசன் சஞ்சய் உடனடியாக ரசிகர்களை நோக்கி 'Thumbs-up' சைகை காட்டினார். இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்தனர்.
ஜேசன் சஞ்சய்யின் இந்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக, ரசிகர்களின் TVK முழக்கத்துக்கு ஜேசன் சஞ்சய் கொடுத்த Thumbs-up தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Listen News!