அஜித் தற்போது சினிமாவை விட கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாகவே தனது அடுத்தடுத்த படங்களின் பணிகளையும் அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘டேர்டெவில்’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்’ என்ற டாக்குமெண்டரி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த டிரைலரை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் பார்த்துள்ளார். அப்போது ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்த அவர், “ஆடியோ லாஞ்ச் வச்சுடலாமா?” என கேட்டதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டதும் ரசிகர்கள், அஜித்தின் அடுத்த படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடக்கப்போகிறதா என்ற எதிர்பார்ப்பில் உற்சாகமடைந்துள்ளனர்.
Listen News!