• Jan 28 2026

இசைஞானி இளையராஜாவுக்கு பொன்விழா பாராட்டு விழா...!ரஜினிகாந்துக்கு அமைச்சர் அழைப்பிதழ்..!

Roshika / 4 months ago

Advertisement

Listen News!

இசை உலகின் லெஜண்டாக வலம் வரும் இசைஞானி இளையராஜா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அதேசமயம், 8,500-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசை அமைத்து, இந்திய இசை உலகில் நீங்கா முத்திரை பதித்துள்ளார்.


1975-ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, இவ்வருடம் தனது இசைப் பயணத்தின் 50-ஆவது ஆண்டை, அதாவது பொன்விழா ஆண்டை கொண்டாடுகிறார். இந்த சிறப்பு தருணத்தை நினைவுபடுத்தும் வகையில், தமிழக அரசு சார்பில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை நகரில் இசைஞானி இளையராஜாவுக்கு சிறப்பான பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் அரசியல், சினிமா, கலாசார உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். இதையொட்டி, தமிழக அரசின் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து, பாராட்டு விழாவுக்கான அதிகாரபூர்வ அழைப்பிதழை வழங்கினார்.

இசைஞானியின் கலையுலக சாதனைகளைப் பாராட்டும் இந்த விழா, அவரது ரசிகர்கள் மற்றும் இசை உலகுக்கே ஒரு பெரும் கௌரவ நிகழ்வாக அமைய உள்ளது.

Advertisement

Advertisement