• Sep 12 2025

ஜனநாயகன் படம் தொடர்பில் வெளியான சுவாரஸ்ய தகவல்

Aathira / 12 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பில்,  எச். வினோத் இயக்கும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்தப் படம் விஜய் நடிக்கும் இறுதி படம் என கூறப்படுகிறது. தற்போது விஜய் தீவிரமாக அரசியலில் களமிறங்கி உள்ளதால்  இந்த படத்திற்கு அரசியல் களத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜனநாயகன் திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியாகும்  வழக்கமான படங்கள் போல் இல்லாமல் அரசியல் நெருக்கடி அதிகம் கொண்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த படத்தில் பஞ்ச் வசனங்களுக்கு குறைவில்லையாம். அதே போல விஜயின் கட்சி மற்றும் கட்சி கொடி பற்றிய சில காட்சிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாம். 

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தளபதி ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 


இந்த நிலையில்,  ஜனநாயகன் திரைப்படத்தில் 100% Vijayism இருப்பது உறுதி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது இந்த படத்தின்  எடிட்டர் பிரதீப் சொல்வது போலவே ஜனநாயகன் படம் திரையில் பார்க்க காத்திருக்க வைக்கும் அளவுக்கு பல எக்ஸைட்டிங் எலேமென்ட்ஸ் கொண்டது.. 100%   Vijayism கேரண்டி என்று அவர் உறுதி அளித்துள்ளார். எனவே  தளபதி  ரசிகர்களுக்கு இந்த படம் பக்கா விருந்தாக அமையப் போகின்றது. 

Advertisement

Advertisement