• Jan 20 2025

கோபியின் கிச்சன் டீமை பார்த்தா டவுட்டா இருக்கே.! செல்வி பிடிச்ச கரெக்ட் பாயிண்ட்?

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி திட்டியதை நினைத்து மையூ கவலைப்பட்டுக் கொண்டிருக்க அங்கு வந்த பாக்கியா அவரை சமாதானப்படுத்தி அவருக்கு கிப்ட் கொடுக்கின்றார். மேலும் இனிமேல் ஈஸ்வரி பாட்டி அப்படி பேச மாட்டார் நான் அவருக்கு புரியும் படி எடுத்துச் சொல்லி விட்டேன். இனியாவை போல அனைத்து உரிமையும் உனக்கும் கோபி மீது உள்ளது அவரை அப்பா என்று கூப்பிடலாம் என்று மையூவை சமாதானப்படுத்துகிறார்.

இதன் போது அங்கு வந்த இனியாவும் மையூவிடம் மன்னிப்பு கேட்டு கிஃப்ட் ஒன்றை கொடுக்கின்றார். இதனால் உனக்கு நான் இனியா, அம்மா என மூன்று பேரும் சப்போர்ட்டாக இருக்கின்றோம் எதற்கும் யோசிக்க வேண்டாம் என்று மையூவுக்கு தைரியம் கொடுக்கின்றார்.

அடுத்த நாள் பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்க அங்கு எல்லோரும் வருகின்றார். மேலும் கல்யாண ஆர்டருக்கு கோபியின் கிச்சன் ஆட்கள் வருவார்களா என்று பாக்யாவை போன் பண்ணி கேட்க சொல்லுகின்றார் செல்வி. ஆனாலும் பாக்கியா கேட்கவில்லை. இதன்போது செல்வி எழிலிடம், கோபி சார் முன்ன மாதிரி இல்ல பாக்கியா அக்கா மீது லவ் வந்துடுச்சு அவருக்கு என்று சொல்லுகின்றார்.


அந்த நேரத்தில் கோபி தனது வேலை ஆட்களுடன் மாஸாக என்ட்ரி  கொடுக்கிறார். மேலும் பாக்யாவை பெருமையாக அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றார். அதன் பின்பு பாக்கியா இந்த சமையல் கிராமத்து முறையில் சமைக்க வேண்டும் என்று பேச, இறுதியில் கைதட்டி பாராட்டுகின்றார் கோபி. இதை பார்த்த எழில், செல்வி அக்கா சொல்லும் போது கூட நான் நம்பவில்லை. பாசக்காரரா மாறிட்டார் என்று அவரும் நக்கல் அடிக்கின்றார்.

இறுதியில் பாக்கியா கணக்கு பார்த்துக் கொண்டிருக்க அங்கு வந்த ராதிகாவிடம், கோபி தந்த ஓபரை நான் எடுத்துக் கொண்டேன். இத மட்டும் செய்து முடிக்கின்றேன் என்று சொல்லுகின்றார். அதற்கு ராதிகா என்ன பதில் சொல்லப் போகின்றார் என்பது தெரியவில்லை இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement