விஜய் டிவி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 8 அமோகமாக முடிவடைந்தது. அந்த சீசன் டைட்டிலை அனைவரும் எதிர்பார்த்த முத்துக்குமரன் வென்றுள்ளார். சௌந்தர்யா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். விஷ்ணு மூன்றாவது இடம் பெற்றுள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முத்துக்குமரன் டைட்டிலை வென்ற பின்னர், அவரது அம்மாவும் அப்பாவும் முத்துக்குமரனை ஆரத் தழுவி முத்தம் கொடுத்தனர். இதனைப் பார்த்த சக போட்டியாளர்கள் நெகிழ்ந்து போனார்கள். அவர் கோப்பையை வாங்கும்போது, அவரது பெற்றோர்கள் மேடையில் அவருக்கு அருகில் இருந்தார்கள்.
இதனை அடுத்து டைட்டில் வென்ற முத்துக்குமரன் பேசும்போது, " இந்தக் கோப்பை என்னுடையது மட்டும் இல்லை. எங்கள் 24 பேருடையதும் கூட. என்னால் வெல்லமுடியும் என்றால், அனைவராலும் வெல்ல முடியும். என்னைத் திட்டித் திருத்தி என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள் எனத் தெரிவித்தார்.
மேலும் இது என்னோட வெற்றி இல்லை. எந்த ஏழ்மையிலையும் எந்த வறுமையிலையும் எந்த இருட்டான சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையும் தன்மானத்தையும் விட்டு கொடுக்காத ஒரு பெண்ணோட வெற்றி அந்த வேற யாரும் இல்லை என் அம்மா என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் முத்துக்குமரன். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
Listen News!