• Feb 22 2025

50 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸான MGR படத்திற்கு எகிறும் மவுசு? நிரம்பி வழியும் இருக்கைகள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் தான் எம்ஜிஆர். இவர் வாள் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுக்களில் தேர்ச்சி பெற்றவராக காணப்பட்டார். இவருடைய நடிப்பில் முதலாவதாக வெளியான நாடோடி மன்னன் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இன்னொரு பக்கம் அரசியலில் ஈடுபட்டு வந்த எம்ஜிஆர், அதிமுக கட்சியையும் தொடங்கினார். அப்போது உலகளவில் சிறந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டும், அதற்கு ஏற்றார் போல கதை தேவை என்று தேடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எம்ஜிஆருக்கு உலகம் சுற்றும் வாலிபர் என்ற படத்தின் கதை கிடைத்தது. ஆனாலும் அந்த படத்தை படமாக்க பல தடைகள் வந்துள்ளது.


இதைத்தொடர்ந்து வெளிநாட்டுக்கு செல்ல தயாரான எம்ஜிஆருக்கு பல அரசியல் தடைகளும் வந்தது. ஆனால் இறுதியில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை சிறப்பாக எடுத்து முடித்தார். 

இந்த நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் தற்போது ரீ ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகின்றது. மேலும் இதன் காட்சிகள் அனைத்தும் ஹவுஸ் ஃபுல்லாக காணப்படுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


அதாவது, எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூரில் உள்ள திரையரங்குகளில் கடந்த மூன்று நாட்களாகவே இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் மிகுந்த வரவேற்போடு திரையிடப்பட்டு வருகின்றது.

மேலும் எம்ஜிஆருக்கு பெரிய கட்டவுட் வைத்து பாலாபிஷேகமும் ரசிகர்கள் செய்துள்ளார்கள். 50 ஆண்டுகள் கடந்தும் இந்த படம் கொண்டாடப்பட்டு  வருவதோடு, திரையரங்க இருக்கைகள் நிரம்பி வழிகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement