• Jan 18 2025

நெஞ்சை பிடித்து உக்கார்ந்த கோபி! ஈஸ்வரி போட்ட கண்டிஷன்! கடுப்பில் பாக்கியா..

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய நாள் எபிசோட்டில் என்ன நடைபெற்றிருக்கிறது என்று பார்ப்போம்  வாங்க . 

கோபி வீட்டுக்குள் உட்கார்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து பாக்கியா நீங்கள் இந்த வீட்டை விட்டு போக வேண்டும் நீங்களா போனா நல்லது இல்லனா நானா அனுப்ப வேண்டியதா இருக்கும்.  என்று அனைவரும் முன்னாடியும் சொல்லிவிட்டு செல்கிறார். உடனே கோபி, பாக்கியா சொல்வது சரிதான் நான் இந்த வீட்டில் இருக்க முடியாது, கிளம்புகிறேன் என்று சொல்லி எழும்பும்போது திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது. 


அப்போது செழியன் டாக்டரை கூட்டிட்டு கொண்டு வருகிறார். கோபிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனால் பயந்து போன ஈஸ்வரி பாக்யாவிடம் கோபி இங்கே இருக்கட்டும். எனக்கு இருப்பது ஒரே மகன்தான், அவனையும் நான் இழக்க தயாராக இல்லை. நான் உன்னிடம் மடிப்பிச்சை கேட்கிறேன். தயவு செய்து என் பிள்ளையை என்னிடம் இருந்து பிரித்து விடாதே என்று பாக்யாவின் வாயை அடைத்து விடுகிறார்.


மறுபடியும் ஈஸ்வரி அவன் உடம்பு இருக்கும் கண்டிஷனுக்கு மறுபடியும் கோர்ட்டு கேஸ் என்று போக  முடியாது.  நீ கோபிமேல கொடுத்த கேசை வாபஸ் வாங்கு என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா உங்க பிள்ளை செஞ்ச தவறால் அந்த சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு ஏதாவது ஆயிருந்தால் யார் பொறுப்பாக இருக்க முடியும் என்று கேட்கிறார். உடனே ஜெனி, பாக்யாவிடம் யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல. உங்களுக்கு என்ன தோணுதோ அதன்படி முடிவு எடுங்கள் என்று சொல்கிறார்.  கோபி, ராதிகா மீதும் தப்பில்லை பாக்கியா மீதும் தப்பில்லை நான்தான் மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று சொல்லி பாக்கியாவுக்கு இனி சுமை இல்லாம பிள்ளைகளை பார்த்துக்க போறேன் என ஈஸ்வரியிடம் கூறுகிறார். இத்தோடு இன்றைய நாள் எபிசோட் முடிவடைகிறது. 


Advertisement

Advertisement